பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு தடை!

Share this News:

புதுடெல்லி (23 ஜூன் 2020): பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒருபுறம் கொரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இது இப்படியிருக்க யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது. ஆனால் இந்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் மருந்து விளம்பரத்தை நிறுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெயர், மருந்தின் கலவை பற்றிய விபரங்களை பதஞ்சலியிடம் கேட்கப்பட்டுள்ளது.


Share this News: