பாஜகவுக்கு பலத்த அடி – குஜராத்தில் மட்டுமே கொண்டாட்டம்!

Share this News:

புதுடெல்லி (08 டிச 2022): குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல், 2 கட்டங்களாக நடைபெற்றது.

டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 28 இடங்களிலும் பாஜக 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக 44 இடங்களை கைபற்றியிருந்தது.

மேலும், டெல்லி நகராட்சியையும் பாஜக இழந்துள்ளது. தற்போது அது ஆம் ஆத்மி கையில் சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆக, “குஜராத் வெற்றியை மட்டுமே பாஜகவால் கொண்டாட முடியும்; மற்ற மாநிலங்களில், பாஜகவுக்கு பலத்த அடிதான்!” என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply