மும்பை (17 செப் 2022): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் தயாரிக்கும் உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிர எஃப்.டி.ஏ. அரசாங்க நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் குழந்தைகளின் தோலை பாதிக்கக்கூடும் என்று ஆய்வக சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவை தளமாகக் கொண்ட மத்திய மருந்து ஆய்வகத்தின் உறுதியான அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, அதில் ‘பிஹெச் சோதனையைப் பொறுத்தவரை மாதிரி ஐஎஸ் 5339:2004 உடன் ஒத்துப்போகவில்லை. மருந்து அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் கீழ் சந்தையில் இருந்து தயாரிப்புகளை திரும்பப் பெறவும் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் ஆய்வகத்தின் சோதனை அறிக்கையை எதிர்த்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.