சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

Share this News:

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பிம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி பகுதியில் உள்ள ஜும்மா மஸ்ஜித்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு தலைமை தாங்கியதை அடுத்து சந்திரசேகர் ஆசாத் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்..

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியுள்ளது.

ஆனால் அவர் தேசிய தலைநகரில் தங்கவோ அல்லது எதிர்ப்புக்களை நடத்தவோ அவரை டெல்லி நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 33 வயதான ஆசாத்திற்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது, என்றபோதிலும் அவர் நகரத்தில் போராட்டங்களை நடத்தவோ, நகரத்தில் தங்கவோ அனுமதி மறுத்துள்ளது.


Share this News:

Leave a Reply