பெங்களூரு மழை வெள்ளத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும் கரணம் என்ன தெரியுமா?

Share this News:

பெங்களூரு (07 செப் 2022): பெங்களுருவில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமுமே காரணம் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவில், இதுபோன்ற கனமழை முன்னர் பெய்தது கிடையாது. என்று முதல்வர் சவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மேலும் முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமும், திட்டமிடப்படாத நிர்வாகமுமே தற்போதைய பாதிப்புக்கு காரணம் காங்., ஆட்சியில் எல்லா இடங்களிலும் கட்டட அனுமதியை சரமாரியாக கொடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிகமாக உள்ளன. தற்போதைய துன்பத்திற்கு இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களே காரணம். ஏரி குளங்களை பராமரிக்க அவர்கள் எண்ணியது கிடையாது. ஏரியின் முகத்துவாரம் என்று பாராமல் கட்டடங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

தற்போது, நான் இதனை சவாலாக எடுத்து கொண்டுள்ளேன். மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், மழை நீர் தடையில்லாமல் குளங்களுக்கு சென்று சேரும். என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply