ஒழுங்கீனமாக நடந்த பாஜகவினர் கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் – (VIDEO)

Share this News:

போபால் (21 ஜன 2020): போபாலில் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து ஒழுங்கீனமாக நடந்த பாஜகவை சேர்ந்தவர் கன்னத்தில் கலெக்டர் அறைந்ததால் பரபரப்பு ஏற்படது.

மத்திய பிரதேசம் போபாலில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையேமோதல் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கலெக்டர் நிதி நிவேதிதா ஒழுங்கீனமாக நடந்த நபர் யார் என்பதை தேடி பிடித்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள உதவி கலெக்டர் பிரியா வர்மா, போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. அதையும் மீறி போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டத்தை அமைதியாக நடத்தாமல் வன்முறையில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசார் வன்முறையை அடக்க வேண்டி இருந்தது.

மேலும் போராட்டக் காரர்கள் எங்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர். அதனாலேயே அவர் ஒழுங்கீனமாக நடந்தவர் கன்னத்தில் அறைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து  அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில்ன் வன்முறையில் ஈடுபட்டதாக 124 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply