மாதவிடாய் காலம் – மாணவிகளை தீண்டாமை கொடுமையில் தள்ளிய கல்லூரி!

Share this News:

அஹமதாபாத் (15 பிப் 2020): குஜராத் மாநிலத்தில் மாணவிகளை ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் விடுதி சமையலறை மற்றும் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் மற்ற மாணவிகளுடனும், பேசவோ பழகவோ கூடாது என்றும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.

இந்த நிலையில் கல்லூரி விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில் 68 மாணவிகளை முதல்வர் தலைமையில், உள்ளாடைகளை களையச் சொல்லி சோதனை நடந்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

மேலும் கல்லூரி மாணவிகளை தீண்டாமை காரணமாக இதுபோன்று சோதனை செய்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply