போபால் (12 நவ 2019): பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பாக பேசிய அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அயோத்தி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், மாறாக மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
தீர்ப்பை கடுமையாக விமர்சித்த (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி, இலவசமாக வழங்கும் ஐந்து ஏக்கர் நிலம் தேவையில்லை என பேசியிருந்தார்.
இந்நிலையில் அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக பவன்குமார் என்ற வழக்கறிஞர் போபாலில் வழக்கு தொடர்ந்துள்ளார்.