தொகுதி கிடைக்காததால் மொட்டை அடித்துக்கொண்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி!

Share this News:

திருவனந்தபுரம் (15 மார்ச் 2021): கேரளாவில் அடுத்த மாதம் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி பாஜக ஆகியவை போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில் முதற்கட்டமாக 86 வேட்பாளா்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (14 மார்ச்) காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் கோட்டயத்தைச் சோ்ந்த மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி லதிகா சுபாஷின் பெயா் வேட்பாளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர், தனது ஆதரவாளா்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்து மொட்டையடித்து தனது எதிா்ப்பைக் காட்டினாா்.

இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Share this News:

Leave a Reply