மும்பை (17 மார்ச் 2020): கொரோனா பாதித்தவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 3 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 100 ஐக் கடந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் 64 வயது மதிக்கத்தக்கவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
உலக நாடுகள் பலவற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறை எட்டியதும் வைரஸ் பரவல் மிக வேகமாகக் கூடத் தொடங்கியுள்ளது. அந்த நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த மிகவும் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன.
இந்தியா இதுவரை சிறப்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல் கொரோனா பாதிப்பு ஜனவரி 30ஆம் தேதி தெரியவந்தது. இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியை நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் இந்தியா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், இனிவரும் சில வாரங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பது மிகவும் முக்கியம்.