இந்தியாவில் கொரோனா பாதிப்பு 629 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (26 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆக உயரந்துள்ளது.

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வீட்டுக்குள் இருக்க வேண்டி அனைத்து மாநில அரசுகளும் உத்தரவு பிறப்பித்துள்ளன.இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *