இஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஃரிடியை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்” உண்மையில் மிக உண்ணதமான சேவையை செய்கிறீர்கள் அஃப்ரிடி. மனிதநேயமிக்க உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களுக்கு இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். உலகில் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஃப்ரிடி பதிவிட்டுள்ளார். அதில், “மிக்க நன்றி பாஜி, உலகில் மனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை. இது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். நாம் அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.