புதுடெல்லி (18 மார்ச் 2020): இந்திய ராணுவத்திலும் கொரோனா வைரஸ் நோய் நுழைந்துவிட்டது.
கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பில் இருந்த சிப்பாயின் தந்தை ஈரான் சென்று திரும்பியதாகவும், அவரின் தந்தை வழியே இவருக்கு தொற்று பரவியிருக்கலாம் எனவும் தெரிகிறது.
இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) செவ்வாயன்று இந்தியா தற்போது 2-வது கட்டத்தில் உள்ளது, வைரஸ் தொற்றுநோயின் 3-வது கட்டத்தில் இல்லை என்று வலியுறுத்தியது. நிலைமையைச் சமாளிக்க ICMR சோதனைக்கு அரசுத் துறையில் 72 செயல்பாட்டு ஆய்வகங்கள் உள்ளன என, ICMR இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் இந்த வார இறுதிக்குள் மேலும் 49 பேர் செயல்பாடுகளில் ஈடுப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.
உலகளவில், இன்று வரை பதிவாகியுள்ள நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை 198,102-ஆக பதிவாகியுள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை 7950 எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில்., 3 இறப்புகள் உள்பட 153 பேர கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்..