இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!

Share this News:

புதுடெல்லி (02 ஆக 2020): இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 20க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் அதன் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403 ஆக அதிகரித்துள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கொரோனாவின் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply