குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

Share this News:

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில் அவர் பொய்யாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அவர் அமைதியான முறையிலேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் . இவ்வக்கில் அவர் ஏற்கனவே மார்ச் 21 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டபோதும், விடுதலை செய்யாமல் விசாரணைக்காக மீண்டும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இஸ்ரத் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று ஜாமீன் மீதான மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஜாமீன் வழங்கியும் விடுதலை செய்யாததன் மூலம் நீதித்துறையை கேலி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரத் ஜஹான் குற்றம் சாட்டினார்.
.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராடத்தின் போது இஸ்ரத் பேசிய பேச்சுக்கள் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டி அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News: