அஹமதாபாத் (13 ஜன 2020): குஜராத்தில் தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார்.
குஜராத்தின் ஹிம்மன்த்நகரில் உள்ள மோடசா கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், வண்புணர்வு செய்யப்பட்டதோடு, அப்பெண் கோயில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் பெண் ஜனவரி 1ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை எதிர்த்து மோடசா காவல் நிலையம் முன் தலித் சமூகத்தைச் சேர்ந்த பலர் போராட்டம் நடத்தினார்கள். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டி அவர்கள் போராட்டம் நடத்தியபோதும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் நடந்தது என்ன என்று தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.