2 வருடங்களுக்குப் பிறகு டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மீண்டும் திறப்பு!

Share this News:

புதுடெல்லி (17 மார்ச் 2022): கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டு மூடப்பட்ட டெல்லி , நிஜாமுதீன் மார்க்கஸ் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

கோவிட்-19 நெறிமுறைகளை மர்கஸ் வருபவர்கள் பின்பற்றுவதை மசூதி நிர்வாகம் உறுதி செய்யும் என்று கூறியதை அடுத்து , டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை மார்க்கஸின் மூன்று தளங்களை மீண்டும் திறக்க அனுமதித்தது.

நீதிமன்ற உத்தரவில், மசூதி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் மார்ச் 18 ஆம் தேதி ஷப்-இ-பாரத்திற்கு ஒரு நாள் முன்னதாக மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் என்றும், மறுநாள் 4 மணிக்கு மூடப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனை அடுத்து காவல்துறை கூற்றுப்படி, மதியம் 12.30 மணியளவில் மர்கஸ் திறக்கப்பட்டது.

மார்ச் 2020 இல் தப்லிகி ஜமாஅத் நடத்திய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டதை அடுத்து, நிஜாமுதீன் மார்க்கஸ் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது..


Share this News:

Leave a Reply