அஹமதாபாத் (24 பிப் 2020): குஜராத்தில் அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மோடி பேசிக்கொண்டு இருந்தபோது பொதுமக்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்பும் உரையாற்றினர். ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப்.
அப்போது, “எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி. கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் மோடி. மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது இந்தியா. இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். 10 ஆண்டுகளில் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் 7 இந்தியர்கள் வறுமையில் இருந்து மீள்கின்றனர்.
இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்களிக்கும் குஜராத்தியர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியர்கள் தாங்கள் நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
டிரம்ப் – மோதி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்திலிருந்து வெளியேறிய மக்கள் pic.twitter.com/wg3WDbHnyf
— BBC News Tamil (@bbctamil) February 24, 2020
இந்நிலையில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டிருந்தபோதே பொதுமக்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.