மூன்று கிலோமீட்டர் ஓடிச்சென்று அவசர அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்!

Share this News:

பெங்களூரு (12 செப் 2022): சில மருத்துவர்களின் செயல்கள் மிகவும் மெச்சத்தகுந்ததாக இருக்கும் அப்படி ஒரு மருத்துவர் சாலையில் ஓடிச்சென்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார்.

டாக்டர். கோவிந்த் சர்ஜாபுரா சாலை மணிப்பால் மருத்துவமனையில் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் ஆக உள்ளார். இந்நிலையில் பித்தப்பை நோயால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. அதன்படி மருத்துவர் கோவிந்த் மருத்துவமனையை நோக்கி அவரசமாக காரில் சென்றார்.

மருத்துவரின் கார் சர்ஜாபுரா-மரத்தஹள்ளி சாலையில் வந்தபோது போக்குவரத்தில் சிக்கியது. ஆனால் போக்குவரத்து நெரிசலால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையை அடைய நேரம் ஆகும் என்பதை உணர்ந்து டாக்டர் காரை விட்டு இறங்கி ஓடினார். குறித்த நேரத்திற்கு ஓடிச்சென்று அறுவை மருத்துவர் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு நோயாளியைக் காப்பாற்றினார்.

இதுகுறித்து பேசிய மருத்துவர், “வழக்கமான உடற்பயிற்சியால் எனக்கு ஓடுவது எளிதாக இருந்தது. மூன்று கிலோமீட்டர்கள் ஓடி மருத்துவமனையை அடைவதற்குள், அறுவை சிகிச்சைக்கான நேரம் வந்துவிட்டது” என்று மருத்துவர் தெரிவித்தார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளி குணமடைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *