புதுடெல்லி (05 டிச 2020): டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்குவதாக உச்ச நீதிமன்ற பார் சங்கத்தின் தலைவர் துஷ்யந்த் டேவ் அறிவித்துள்ளார். முன்னதாக, டெல்லி பார் கவுன்சிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக முன்வந்தது.
விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள , துஷ்யந்த் டேவ், விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல, சட்ட விரோதமும் ஆகும் என்றார்.
இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று வேலைநிறுத்தத்தின் பத்தாவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.