டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் கண்ணீர் புகை வீச்சு – தடுப்புகள் உடைப்பு!

Share this News:

புதுடெல்லி (26 நவ 2020): வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் ஹரியானா எல்லையில் முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிராக போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாலத்தில் அமைக்கப்பட்ட போலீஸ் தடுப்புகளை ஆற்றில் வீசினர்.

முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உத்தரவின் பேரில் ஹரியானா பஞ்சாப் இடையிலான தனது எல்லையை அரியானா அரசு மூடியுள்ளது. மேலும் ஹரியானா பஞ்சாபிற்கான பஸ் சேவையை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

விவசாயிகள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Share this News:

Leave a Reply