புதுடெல்லி (25 டிச 2020): டெல்லியில் தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டதில் இதுவரை 32 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களை திருப்திப்படுத்துவதற்காக மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை முன்வைத்திருந்தாலும், சட்டம் திரும்பப் பெறும் வரை தாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
ஆனால் சட்டத்தை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாகவே உள்ளது.