நாடாளுமன்றத்தில் வாபஸ் பெறாமல் போராட்டம் வாபஸ் இல்லை – விவசாயிகள் அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி(21 நவ 2021): வேளாண் சட்டம் திரும்பப் பெற்றபோதிலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றாமல் போராட்டம் வாபஸ் இல்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு கிசான் மோர்ச்சா (ஜேகேஎம்) இன்று சிங்கில் கூடுகிறது.

முன்னதாக நேற்று விவசாயிகள் அமைப்புகளின் கோர் கமிட்டி கூடி டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும் என அறிவித்தது.

லக்னோவில் இன்று நடைபெறும் மகா பஞ்சாயத்து கூட்டத்திலும், திட்டமிட்டபடி நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் டிராக்டர் பேரணி மற்றும் பிற கண்டன பேரணிகளிலும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

ஆதார விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தக் கோரிக்கைகளை ஏற்காமல் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply