புதுடெல்லி (20 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய ‘கொரோனா வைரஸ்’ தற்போதைய சூல்நிலையில் உலகையே உலுக்கி வருகிறது. உலகில் மொத்தம் 176 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த நோயினால் இதுவரை 190 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த நோய்க்கு வெள்ளிக்கிழமை காலை வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்ப்பூரில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் இந்த நோய்க்கு உயிரிழந்ததன் மூலம் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று ஒரு நபருக்கு உறுதிப்படுத்தப்படும் போது, அவருக்கு எப்படி பரவியது எனக் கண்டறிய முடியவில்லை , அதாவது அறிகுறிகள் வெளியே தெரியாமலே உள்ள நபர்கள், தங்களை அறியாமல் பிறருக்கு நோய்த்தொற்றை பரப்பிக் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே தங்களை தாமே தனிமை படுத்துதல், அவசியமின்றி வெளியில் செல்லாமல் இருத்தல், கூட்டங்கள் சேராமல் இருத்தல் உள்ளிட்ட அரசின் உத்தரவை பொது மக்கள் சரியாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.