புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.
முதலில் தலைமை காண்ஸ்டபில் ரத்தன் லால் உயிரிழந்ததாக போலீஸார் அறிவித்தனர். பின்பு மேலும் மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்பு நான்கு என தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில் இக்கலவரம் மத்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறன்று டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களை நாங்களே அப்புறப்படுத்துவோம் என்றும் போலீஸை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்திருந்த நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.