புதுடெல்லி (08 நவ 2021): சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ராணுவ வீரர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ராணுவம் அறிவித்துள்ளது.