புதுடெல்லி (30 ஆக 2020): காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம்நபி ஆசாத் கூறியுளளார்.
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டால், தாம் பெரும் மகிழ்ச்சியடைவேன் என்றும், புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பா.ஜ.க.வுக்கு எதிராக போராட வேண்டியதை தவிர்த்துவிட்டு, கட்சிக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மற்றொரு மூத்த தலைவரான திரு. கபில் சிபல் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..