புதுடெல்லி (13 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் ஏபிவிபியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 5 ம் தேதி டில்லி ஜே.என்யு.,வில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் ஒரு பெண் முகமூடி அணிந்து தாக்குதலில் ஈடுபட்டது சிசிடிவி மூலம் தெரிய வந்தது. அந்த பெண் ஒருவர் கையில் கட்டையுடன், முகமூடி அணிந்து தாக்குதலில் ஈடுபட்டார். தற்போது அப்பெண் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த பெண் என்றும் அவர்ஜே.என்.யு.,மாணவி என்றும் தெரிய வந்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராகும்படி அப்பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரிடம் உடன் சென்ற முகமூடி அணிந்த 2 இளைஞர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.