லக்னோ (01 ஜன 2021): கோவிட் தடுப்பூசிக்கான பதிவு என்ற பெயரில் சைபர் மோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே ஆதார் எண் ஒடிபி போன்ற எந்த தகவலையும் போலி தொலைபேசி மூலம் கேட்பவர்களிடம் கொடுக்கக் கூடாது என்று உபி அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவிட் நோய்க்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு இன்னும் கொண்டு வரவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் சைபர் கிரைமிற்கு பலியாகலாம் என்றும் தடுப்பூசி பதிவுக்கு எந்த விவரங்களையும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.