ஆமதாபாத் (03 நவ 2022): குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.
இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்கின்றனர்.
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.