பெங்களூரு (01 ஏப் 2022): கர்நாடகாவில் ஹலால் இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்துவா குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினர் வியாழக்கிழமை பத்ராவதியில் ஒரு முஸ்லிம் விற்பனையாளரைத் தாக்கியுள்ளது.
இதுகுறித்து ANI இடம் பேசிய ஷிவமொக்கா காவல் கண்காணிப்பாளர் (SP) BM லக்ஷ்மி பிரசாத், தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். “பஜ்ரங் தள் ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்து ஒரு முஸ்லீம் வியாபாரியைத் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து பத்ராவதியில் உள்ள ஹோசமானே காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை, வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் ஹலால் இறைச்சிக்கு எதிராக ஹோசமானே பகுதியில் மதியம் 12.30 மணியளவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரான தௌசிப்பை அச்சுறுத்தியதாகவும், காவல்துறை கூறியது.
புதன்கிழமை, முதலமைச்சர் பொம்மை, ‘ஹலால்’ இறைச்சி விவகாரத்திற்கு எதிராக இப்போது “கடுமையான ஆட்சேபனைகள்” எழுப்பப்பட்டுள்ளதால், மாநில அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.