எஸ்பிஐ ஏடிஎம்முக்கு செல்லும் முன் வாடிக்கையாளர்கள் இதனை கட்டாயம் கடைபிடியுங்கள்!

Share this News:

புதுடெல்லி (01 டிச 2021): எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் செல்வதற்கு கட்டாயம் மொபைல் ஃபோனை கையோடு கொண்டு செல்வது அவசியமாகும். இல்லையெனில் உங்களால் பணம் எடுக்க முடியாது.

இந்த மாற்றம் எஸ்பிஐயில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பலருக்கு இதுக் குறித்த சந்தேகங்கள் உள்ளன. போதிய தெளிவான விவரங்கள் கிடைக்காமல் குழம்பியவர்களும் உண்டு. அந்த வகையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் மாறியுள்ள விதிமுறைகள் பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சேவையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதே நேர அபராதம், கட்டணம் என வரும் போது கரார் வங்கி லிஸ்டிலும் சேர்ந்து விடுகிறது. எஸ்பிஐ வங்கி மீது இதுவரை ஏக்கப்பட்ட புகார்கள், சர்ச்சைகள் வந்துள்ள நிலையிலும் வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்  எஸ்பிஐ முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில் ஏடிஎம் பணம் திருட்டு, ஏடிஎம் கொள்ளை போன்றவற்றில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க இந்த வங்கி ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

அதாவது, எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் OTP ஐ உள்ளிட வேண்டும். OTP இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் OTP பெறுவார்கள். அந்த OTP-ஐ உள்ளிட்ட பிறகுதான் பணத்தை எடுக்க முடியும். ரூ.10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை எடுப்பவர்களுக்கு இது பொருந்தும். வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு டெபிட் கார்டு MPINஐ பதிவிட்ட பிறகு OTP செல்லும்.

ஒவ்வொரு முறையும் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ரூ.10,000 மற்றும் அதற்கு மேல் எடுக்க இந்த முறையே பின்பற்றப்படும்.


Share this News:

Leave a Reply