மலேசியாவுக்கு உதவ இந்தியா முடிவு!

Share this News:

புதுடெல்லி (16 ஏப் 2020): மலேசியாவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தென்கிழக்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன. தற்போது மலேசியாவும் இம்மாத்திரைகளை கோரியதால் இந்தியா வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, குடியுரிமை சட்டதிருத்தம் ஆகியவற்றை எதிர்த்து மலேசியா கடுமையாக விமர்சித்தது. இதனால் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply