புதுடெல்லி (16 ஜன 2021): இந்தியாவின் கொரோனா தடுப்பூசி வழங்கலை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மருத்துவ தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் தடுப்பூசி போட்ட பிறகும் குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். என மோடி கேட்டுக்கொண்டார். “எங்கள் தடுப்பூசி உருவாக்குநர்கள் மீது உலகளாவிய நம்பகத்தன்மை உள்ளது. உலகளவில் 60% குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.” எனவும் பிரதமர் தெரிவித்தார்.
“இரண்டு தடுப்பூசிகளின் தரவுகளில் திருப்தி அடைந்த பின்னர் DGCI ஒப்புதல் அளித்தது. எனவே வதந்திகளிலிருந்து விலகி இருங்கள்” என்று பிரதமர் மோடி கூறினார். மற்ற உலகளாவிய தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இந்திய தடுப்பூசிகள் மலிவானவை என்றும் பிரதமர் மோடி கூறினார்,
“இந்தியாவின் தடுப்பூசிகள் நாட்டின் நிலைமைகளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அவை நம் நாட்டுக்கு தீர்க்கமான வெற்றியைத் தரும்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். .