புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாமிடத்தில் உள்ள நிலையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தொட்டுவிடும் நிலையில் இந்தியா உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
உலகளவில் கொரோனாவால் சுமார் 2 கோடியே 70 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் பிரேசிலை தொட்டுவிட்ட இந்தியா விரைவில் அமெரிக்காவையும் தொட்டுவிடும் நிலையில் உள்ளது.