லக்னோ (28 மே 2020): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை போலீசார் ஊரடங்கு காலங்களில் சத்தமின்றி கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சஃபோரா சர்கர், மீரன் ஹைதர், ஷிஃபால் ரஹ்மான், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் உத்திர பிரதேசத்திலும் போலீசார் முஸ்லிம்களை குறி வைத்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் இந்திய அரசு முஸ்லிம் எதிர்ப்பை கொரோனா காலங்களிலும் பகிரங்கமாக காட்டி வருவது அப்பட்டமாக தெரிகிறது என்கின்றனர் பொதுமக்கள்.