புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் ஜவான் அனீஸ் வீடும் வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள்.
இந்நிலையில் டெல்லி வட கிழக்கு பகுதியில் இருந்த எல்லை பாதுகாப்பு வீரர் (BSF) முஹம்மது அனீஸ் வீடும் எரித்து நாசம் செய்யப்பட்டுள்ளது.
முஹம்மது அனீஸ் தற்போது மேற்கு வங்கத்தில் பணியில் உள்ளார். அதனால் அவர் வன்முறை கும்பலிடம் சிக்கவில்லை. அவர் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விரைவில் குடியேற விருந்த நிலையில் அவரது வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அனீஸுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அவருக்கு அந்த வீடு புணரமைக்கப்பட்டு திருமண பரிசாக அனீசுக்கு வழங்கப்படும் என்று தலைமை BSF அதிகாரி அனீசின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.