புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார்.
2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உ.பி.அரசு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது.
உ.பி சிறையிலிருந்து வெளிவந்த பின் சித்திக் கப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “உத்திர பிரதேச அரசு என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. எனினும் சிறையிலிருந்து 28 மாதங்களுக்கு பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி.” என்றார்.