பெங்களூரு (15 பிப் 2022): ஹிஜாபுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ள மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிட்டு அசிங்கமான செயலை செய்துள்ளது கர்நாடக பாஜக.
ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இதில் ஹிஜாபை அனுமதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் ஐந்து பேரின் முகவரிகள் அடங்கிய தனிப்பட்ட விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக பிரிவு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் வீட்டு முகவரிகள் கர்நாடக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மேலும் கர்நாடக பாஜகவின் தலைவர் நளின்குமார் கட்டீலும் இதனை ட்வீட் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் மனுதாரர்களாக உள்ள முஸ்லிம் மாணவர்களில் ஐந்து பேர் பதினேழு வயதுடைய சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.