திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் மஞ்சேஸ்வரம், திருச்சூர், பாலக்காடு மற்றும் நேமம் ஆகிய தொகுதிகளைப் பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்திலும் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதில், நேமம் தொகுதி பாஜகவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி 100 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் 40 தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.