திருவனந்தபுரம் (19 ஏப் 2020):கேரளாவில் கொரோனா வைரஸிலிருந்து மாநிலம் மீள்வதற்கு ஆயுர்வேத சிகிச்சையே காரணம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோதி அறிவுறுத்தியிருந்ததாகவும், இதனை ஏற்று கேரள அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 18 ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் மற்றும் கிளினிக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டதாகவும், இதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள திருமதி. ஷைலஜா, ஆயுர்வேதம் மூலம் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.