ஐதராபாத் (12 ஏப் 2020): தெலுங்கானாவில் ஒரு சோதனைச் சாவடியில் கையில் லட்தி ஏந்தி வாகன ஓட்டிகளிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் காவல்துறையினர் இருக்க அவர்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவ்வழியே செல்லும் வாகனங்களை சோதனை செய்வதுபோல் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் பலர் காவல்துறையை குறிச்சொல் செய்து குடிமக்களின் ஆவணங்களை சரிபார்க்க RSS-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.