புதுடெல்லி (15 ஜூலை 2020): ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஏராளமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதிலும், ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கொரோனாவால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்நிலையில் நெருக்கடியை சமாளிப்பதற்காக ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திறன், உடல்நலம், மிகையான ஊழியர்கள் ஆகிய அடிப்படையில் யாரையெல்லாம் விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவும் வெளியாகியுள்ளது. இதற்கக ஏர் இந்தியாவின் துறைசார் தலைவர்களும், மண்டல இயக்குநர்களும் ஒவ்வொரு ஊழியரின் பதிவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.