சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – சாமியார் சிறையிலடைப்பு!

Share this News:

பெங்களூரு (02 செப் 2022): சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான லிங்காயத் சாமியார் பரசுராமன் சிவமூர்த்தியை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) இரவு மடத்தில் வைத்து சிவமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக மடாதிபதியை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு தலித் அமைப்புகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. காவல்துறையும் மாநில அரசும் இவ்வழக்கில் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் சிவமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சாமியாரை செப்டம்பர் 5 வரை போலீஸ் காவலில் வைக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாமியார் குருமூர்த்தி உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட சாமியாரை மாவட்ட மருத்துவமனையின் ஐசியூவில் இருந்து அதிகாரிகள் அழைத்துச் சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவில்,. போலீஸ் காவலின் போது குற்றம் சாட்டப்பட்ட சாமியாரை எங்கும் அழைத்துச் செல்லக்கூடாது என்று அறிவுருத்தியுள்ளது.

சாமியாரை பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக சாமியார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிமன்றம், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவரை மருத்துவமனைக்கு மாற்றியதற்காக அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளது.


Share this News:

Leave a Reply