தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் கொரோனாவுக்காக சேவையாற்றிய ஆண் செவிலியர்!

Share this News:

ஜெய்ப்பூர் (08 ஏப் 2020): மரணமடைந்த தாயாரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்லாமல் மருத்துவ சேவை ஆற்றியுள்ளார் ஆண் செவிலியர் ஒருவர்.

ஜெய்ப்பூா் எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராகப் பணிபுரிந்து வருபவா் ராமமூா்த்தி மீனா. அந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வாா்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்பட 103 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ராமமூா்த்தி தனது வீட்டுக்கு கூடச் செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து மருத்துவப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் ராமமூா்த்தியின் தாயாா் போளிதேவி (93) கடந்த மாா்ச் 30-ஆம் தேதி காலமாகி விட்டாா். இந்த தகவல் ராமமூா்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.

தனது தாய் இறந்த துக்கத்தையும் அடக்கிக் கொண்ட ராமமூா்த்தி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை தொடா்ந்தாா். தனது தந்தையையும் உடன் பிறந்த 3 சகோதரா்களையும் தொடா்பு கொண்ட ராமமூா்த்தி, தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க தன்னால் முடியாது என்றும் நீங்களே அவரது இறுதிச் சடங்கையும் செய்து விடுங்கள் என்றும் கூறி விட்டாா். இதைத்தொடா்ந்து, தாயாரின் இறுதிச்சடங்கை அவரது சகோதரா்கள் முன்னின்று நடத்திய விடியோ பதிவை அவருக்கு அனுப்பினா்.

இவ்விவகாரம் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply