கொரோனாவும் அரசு வேலையும் – மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு!

Share this News:

கொல்கத்தா (15 ஜூலை 2020): கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்திலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த கிளப்பில், கொரோனா பாதித்து அதில் இருந்து விடுபட்டோர், அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதற்கட்டம் ஆக 60 பேர் அதில் இணைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு மனநல ஆலோசனை கூட்டங்களையும் மேற்கு வங்காள அரசு நடத்துகிறது.

தொடர்ந்து பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வரும் மம்தா பானர்ஜி இன்று புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். இதன்படி, கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறியுள்ளார்.


Share this News: