ஜெய்ப்பூர் (08 அக் 2022): பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த் அ31 வயது ரவிபிரகாஷ் மீனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் உள்ள சபோதாரா பகுதியைச் சேர்ந்த ரவிபிரகாஷ் மீனா, டெல்லியில் உள்ள சேனா பவனில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ ரகசிய தகவல்களை கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ஏஜெண்ட் அஞ்சலி திவாரி என்பவர் மூலம் ரவிபிரசாத் மீனா ரகசியங்களை கசிய விட்டுள்ளார்.
இதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றை ஆய்வு செய்து, ஆதாரங்கள் சிக்கிய நிலையில் ரவிபிரசாத் மீனாவை கைது செய்து அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.