புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவன் என்ற டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி கபில் குஜ்ஜார் என்பவன் கைது செய்யப்பட்டான். அபோது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியவாறு போராட்டக் காரர்களை பார்த்து அவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
அப்போது அவன் போலீசாரல் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் அவன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவன் என போலீசார் தெரிவித்துள்ளனர்.. அவன் கடந்த 2019ம் ஆண்டில் அவர் தனது தந்தையுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள அக்கட்சி, போலீஸ் துணை கமிஷனர் தேர்தல் விதிமுறைளை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது