ஜம்மு (30 ஆக 2022): குலாம் நபி ஆசாத்தின் விலகலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 51 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விளக்கியுள்ளனர்.
காங்கிரஸ் முத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது காங்கிரஸ் கட்சியை துவழச் செய்தது. இந்நிலையில் காஷ்மீரின் 51 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விளக்கியுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் ஆசாத்தின் புதிய கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக கட்சியில் இருந்து ராஜினாமா செய்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்ளிட்ட தலைவர்கள் இதில் அடங்குவர்.
சந்த் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோகர் லால் ஷர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பல்வான் சிங் உட்பட பலர், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தங்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் உட்பட தங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கூட்டு ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளோம் என்று பல்வான் சிங் கூறினார்.
51 தலைவர்கள் ராஜினாமா செய்து குலாம் நபி ஆசாத் கட்சியில் சேர உள்ளதால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.