மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பள்ளி மீது பஜ்ரங் தள் அமைப்பினர் வெறிச்செயல்!

Share this News:

போபால் (07 டிச 2021): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஒன்றின் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி செயல்பாட்டாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த பள்ளியில் மாணவர்கள் மதம் மாற்றுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

இதனிடையே, சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மற்ற மிஷனரி பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


Share this News:

Leave a Reply